விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இந்து முன்னணி செஞ்சி ஒன்றிய தலைவர் K. P. ராமு தலைமையில், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று (நவ.30) ஞாயிறன்று
செஞ்சி பெரியகரம் காந்தி பஜாரில் உள்ள லட்சதீப விநாயகர் (எ) ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இறைவனை வேண்டி கூட்டு வேல் வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அறிவுரை சொல்லு முருகா.. முருகா.... என்று இறைவனை வேண்டி வணங்கினர். நிகழ்வில் மணிகண்டன், நகரச் செயலாளர் பிரித்விராஜ், மாவட்ட மற்றும் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

கருத்துரையிடுக