Top News

நியாவிலைகடை பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைகடை பணியாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேளைநிறுத்தம்.



TNCSCக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம், பணிவரன்முறை, 100% ஒதிக்கீடு,100%கனினி மயம் எடையிட்டு வழங்குதல்,தனித்துறை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி மாநிலம் தழுவிய  மாபொரும் உண்ணாவிரதம் போராட்டம் 6-3-2020 ஆம் தேதி அன்று விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழுப்புரம், செஞ்சி, மேல்மலையனூர் போன்ற இடங்களில் நியாயவிலை கடை பணியாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேளைநிறுத்தத்தில் ஈடுப்ட்டனர்.


விழுப்புரம் மற்றும் கள்ளகுறிச்சி மாட்டத்தில் உள்ள நியாவிலை கடைகள் மொத்தம் 2020  செஞ்சி தாலுக்காவில் 207 கடைகளும் மேல்மலையனூர் தாலுக்காவில் 106 கடைகள் இயங்கி வந்த நிலையில் இன்று வேளைநிறுத்த காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளகுறிச்சி மாவட்டத்தில் 86 கடைகள் மட்டுமே இயங்கிவந்தன. இது குறித்து நியாயவிலைகடை பணியாளர்கள் சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் சம்பத் அவர்கள் கூறுகையில் ஒரு கிராமம் என்று எடுத்துகொண்டால் 200 குடும்ப அட்டை உள்ளது அந்த 200 அட்டைகளுக்கும் அரிசி வழங்குவது கிடையாது கூட்டுறவு துறை முலமாக 200கிலோ அரிசி வழங்கவேண்டிய நியாயவிலைகடைகளுக்கு 50 கிலோ குறைவாக 150 கிலோ அரிசி மட்டுமே வழங்கபடுகிறது NRC மூலம் வழங்கப்டும் சோப்பு,பெருங்காயம்,சேமியா, காப்பிதூள்,சுக்கு,கோதுமை,மைதா, உள்ளிட்ட பொருட்கள் தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் வழங்கபடுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தோம் அதற்க்கு மாவட்ட ஆட்சியர்



அவர்கள் NRC பொருட்கள் நியாவிலைகடைகளில் விற்க்கவேண்டிய அவசியம் கிடையாது என்று தெரிவித்தார். ஆனால் NRC பொருட்களை கட்டாயம் விற்க்கவேண்டும் இல்லையெனில் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று கூட்டுறவு துறை நிர்பந்திக்கிறது. ஆகவே நியாயவிலை கடைகளுக்கு வழங்கவேண்டிய உணவு பொருட்கள் 100% வழங்கவேண்டியும் NRC பொருட்களை நிறுத்த கோரியும் இந்த ஒருநாள் அடையாள வேளைநிறுத்தம் இந்த போராட்டத்தில் விழுப்புரம் மாவட்ட நியாயவிலைகடை பணியாளர் சங்க இணை செயலாளர்கள் கோபிநாத் பழனிவேல், ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட போராட்ட குழு தலைவர் தனசேகரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்


Post a Comment

புதியது பழையவை