உலக மகளிர் தினமான இன்று சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் மக்களாட்சி முன்னேற்ற கழகம் இணைந்து மாபெரும் மதுவிலக்கு போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது இந்த போராட்டத்தில் ஏராளமான மகளிர் மற்றும் சமுக ஆர்வளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் சுதேசி பெண்கள் பாதுகாப்பு தலைவர் M.கலைச்செல்வி அவர்கள் பெணகள் பாதுகாப்பு குறித்து 7 கோரிக்கைகளை முன்வைத்தார் 1.மகளிர் வாழ்வை சீரழிக்கும் மதுபானத்தை தடைசெய்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்தவேண்டும். 2.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான மரண தண்டனை சட்டங்களை அமல்படுத்தவேண்டும். 3.அனைத்திலும் மகளிர்க்கான 50% இடஒதிக்கீடு அமல்படுத்துதல் வேண்டும். 4.நிலத்தடி நீரை உறுஞ்சும் மதுபான கூடங்கள் மூடுதல் வேண்டும். 5.மதுவால் பாதிக்கப்பட்ட குடுப்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கிடவேண்டும். 6.தாலுக்கா தோறும் மது மறுவாழ்வு இல்லங்கள் அமைத்திட வேண்டும். 7.மதுவால் பாதிக்கபட்டு கணவனை இழந்த பெண்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என தங்கள் கோரிக்கையை வலியுரித்தினார். பெண்களுகான போராட்டம் தானே! ஆண்களுக்கு என்ன வேலை இருக்கு என்று என்னாமல் இந்த போராட்டத்தை ஆதரித்து மக்களாட்சி முன்னேற்றகழகத்தின் தேசிய தலைவர் திரு.செல்வாபிரியன், கழகத்தின் தேசிய பொதுச்செயலாளர் திரு.வாஞ்சிநாதன். கழகத்தின் தேசிய பொருளாளர் திரு.அல்லா பகேஷ். தேசிய செயலாளர் திரு.அன்பு செயற்குழு உறுப்பினர் திரு.வெங்கடேஷ் மற்றும் நெல்லை சிவா ஆகியோர் இந்த போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்து அவர்களுக்கு ஆதரவு அளித்தனர்.
வேண்டும்! வேண்டும்! பெண்களுக்கு தாலி வேண்டும். வேண்டாம்! வேண்டாம்! மதுபான கடைகள் வேண்டாம். பறிக்காதே! பறிக்காதே! பெண்களின் வாழ்வை பறிக்காதே. என்ற கோஷத்துடன் இந்த போராட்டம் நடைபெற்றது.
கருத்துரையிடுக