மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: ஆயுள் வரம் அளிக்கும் அற்புத வழிபாடு! நீங்களும் சங்கல்பியுங்கள்!

பூர்வஜன்ம வினையாலும், இன்றைய நவீன வாழ்க்கையாலும் உருவான சகல நோய்களில் இருந்து விடுபடவும், நீண்ட ஆயுள் பெறவும் நமது வேதங்கள் அருளிய சிறந்த பரிகார வழிபாடு மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்.
மேகநாதேஸ்வரர் ஆலயம்

மார்க்கண்டேய மகரிஷி, ஈசனின் அருளால் நீண்ட ஆயுள் பெற்றதும், யமனைத் தண்டித்த மஹாமிருத்யுஞ்ஜய பெருமானைப் போற்றி 16 மூல மந்திரங்கள் சொல்லி வழிபட்டார். இதுவே இந்த ஹோமத்துக்கான வித்தாக அமைந்தது என்கிறார்கள் பெரியோர்கள்.

நோய் இல்லாது நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது எல்லோரின் விருப்பமாக உள்ளது. ஆனால் வேகமான இந்த கால வாழ்க்கையில் எங்கும் எதிலும் ஆபத்துக்கள் நிறைந்தபடியே உள்ளன. நாம் ஜாக்கிரதையாக இருந்தாலும் நம்மை எதிர்நோக்கி வரும் ஆபத்துக்கள் நம்மை வேதனைக்குள்ளாக்கி விடுகின்றன. கொடிய நோய்கள், திடீர் விபத்து, எதிரிகள் தாக்குதல் என எத்தனையோ அச்சுறுத்தல்கள். இவற்றில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ள இறைவனை சரணாகதி அடைவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆபத்துக்களில் இருந்து நம்மை மீட்டெடுப்பதில் சிறந்த உபாயமாக இருப்பது மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்!

ஒருவர் தன்னுடைய வாழ்வில் ஒருமுறையேனும் செய்ய வேண்டிய வழிபாடுகளில் முக்கியமானது இந்த மிருத்யுஞ்ஜய ஹோமம் என்கின்றன புனித நூல்கள். இதை வீட்டில் செய்வதை விடவும் பழைமையான சிறந்த பரிகாரக் கோயில்களில் செய்வது சிறப்பானது என்கிறார்கள் பெரியோர்கள். அந்த வகையில் திருக்கடவூர் போன்ற சிறப்பான ஆலயங்களில் செய்யலாம். அதைப்போலவே சென்னைக்கு அருகிலேயே இருக்கும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள மேலக்கோட்டையூர் ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் செய்வது சிறப்பினும் சிறப்பானது என்கிறார்கள். அது ஏன்?

மேகநாதேஸ்வரர்

இங்குதான் வர்ண பகவான், மேகநாதன் எனும் இந்திரஜித் ஆகியோர் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமத்தைச் செய்து பலன் பெற்றார்கள் என புராணங்கள் கூறுகின்றன. இத்தல இறைவன் மேகநாதேஸ்வரராய் மிக அழகாக கம்பீரமாக சதுர ஆவுடையராக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவரே நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் அருளும் அருளாளர். அதேபோல் அன்னை மேகாம்பிகை அழகே உருவாய் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இவளை வழிபட மாங்கல்ய வரமும், மாங்கல்ய உறுதியும் கிடைக்கும் என்கிறார்கள்.

மேலும் இங்கு வாசுகி நர்த்தனர் எனும் அபூர்வ சிவவடிவம் ஒன்றும் திருக்காட்சி தருகின்றது. காளிங்க நர்த்தகராக பகவான் கிருஷ்ணரைப் பல ஆலயங்களில் தரிசனம் செய்திருப்போம். ஆனால் 'வாசுகி நர்த்தனர்' எனும் சிவ வடிவத்தை நம்மில் பலரும் தரிசித்திருக்க மாட்டோம். வாசுகி பாம்பின் மீது சிவபெருமான் நர்த்தனமானும் திருக்கோலமே வாசுகி நர்த்தனர் திருக்கோலம். இவரும் நமக்கு வரவிருக்கும் ஆபத்துக்களை தாமே ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்.

இந்த ஆலயத்தில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் விசேஷம் என்கிறார்கள். காரணம், மார்க்கண்டேய மகரிஷி முதன்முதலாக ஜபித்து வழங்கிய 16 மூலமந்திரங்களையும் இங்கு பலமுறை உருவேற்றி ஹோமத்தில் சமர்ப்பித்து நடத்துகிறார்கள். திருக்கடையூர் போன்ற பழைமையான ஆலயங்களில் மட்டுமே முறைப்படி நடத்தப்படும் இந்த ஹோமம் இங்கு வெகு சிரத்தையுடன் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால், பூரண ஆயுளும், யம பயம் இல்லாத வாழ்வும் கிட்டும் என்கிறார்கள். மேலும் உங்கள் குடும்பத்தினரும் எல்லாவிதமான பாதிப்பிலிருந்தும் காக்கப்படுகிறார்கள். மரண பயத்தை ஒழிக்கும் சக்தி இந்த ஹோமத்திற்கு உண்டு என்றும் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியம் குன்றி இருக்கும் அன்பர்களுக்கும் இந்த ஹோமத்தால் உடல்நலம் மேம்பட்டு, நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்கிறார்கள்.

மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம்

வரும் ஜூன் 28-ம் தேதி (2022) ஆனி மாதம் சர்வ அமாவாசை நாளில் செவ்வாய்க்கிழமை அன்று (சதுர்த்தசி, மிருகசிரீஷ நட்சத்திரம், மரண யோகத்தில்) காலை 10.30 முதல் 12 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெற உள்ளது. வாசகர்கள் கலந்து கொண்டு பலன் பெற வேண்டுகிறோம்!

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்:

'ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!'

பொருள்: நறுமணம் கமழும் தேவதேவனே, சகலருக்கும் உணவூட்டி வளர்ப்ப வரும், முக்கண் கொண்டவருமான ஈசனே, பழுத்த பழம், அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி பிரிவதுபோல, நீண்ட ஆயுளுக்குப் பிறகு மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக.

மஹாம்ருத்யுஞ்ஜயர்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + குங்குமம்+அட்சதை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.



from விகடன் https://ift.tt/H5B1e9f
via IFTTT

Post a Comment

புதியது பழையவை