நடுவனந்தல் கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீ பட்டீஸ்வரர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ கங்கையம்மன், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ பாலமுருகன் ஆகிய ஆலயங்களுக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முன்னதாக யாக சாலை அமைத்து ஆவணி 12 நாள் (ஆகஸ்ட் 28) வியாழக்கிழமை காலை புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு மங்கல இசையுடன் விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ மகாகணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், முதற்கால யாகசாலை வேள்வியும, மூல மந்திர ஹோமம் தீபாராதனையும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆவணி 13 ம் நாள் (ஆகஸ்ட், 29) வெள்ளியன்று காலை 7:00 மணி அளவில் மங்கல இசையுடன் இரண்டாம் கால யாகசாலை வெள்ளியும், புண்ணியாவசனம், சுவாமிக்கு காப்பு கட்டுதல் நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு மங்கள மேள வாத்தியம் இசைக்க புனித நீர் கலசங்கள் யாகசாலையில் இருந்து ஆலய வளாகத்தை சுற்றி வந்து கோபுரங்கள் மற்றும் மூலவர்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மங்களமேளம் இசைக்க திரளான பக்தர்களின் கோவிந்தா! அரோகரா! என கரகோஷம் எழுப்ப கலசங்கள் மீது கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனையும், தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீ பட்டீஸ்வரர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ கங்கையம்மன், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு
புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் கூடி இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாட்டினை நடுவனந்தல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் நடுவனந்தல் வன்னியர் கோட்டை நண்பர்கள் சார்பாக விழாவின் இரண்டு நாட்களும் அறுசுவை விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக