Top News

திண்டிவனம் அருகே அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு விழா!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஆகஸ்ட், 24) 2003 - 2005 ஆம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகள் மறு சந்திப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒலக்கூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஞானவேல் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேல் முன்னிலை வகித்தார். விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவ, மாணவிகள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்களது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து தங்களது ஆசிரியர்களான ஜமுனிராணி, பார்த்தசாரதி, செல்வம், ஜெயச்சந்திரன், குணசேகர், சுந்தரலிங்கம், ராமகிருஷ்ணன், ஜெய்கணேஷ்,சேகர், சிவராமன், அய்யாசாமி, சிவகுமார், ராஜசேகர் உள்ளிட்டோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவு பரிசினை வழங்கினர்.

மேலும் 2003 - 2005 ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவியர்கள் சார்பில் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை டிஜிட்டல் முறையில் அமைத்துக் கொடுத்தனர். ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு பரிமாறிக் கொண்டும், மாணவ, மாணவிகள் ஆடல், பாடல் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நிகழ்வில் முன்னாள் மாணவ, மாணவிகளின் குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் ஒலக்கூர் கிராம பொதுமக்கள் என ஏராளமானேர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை