Top News

செஞ்சியில் தண்டுவட பாதிப்பு தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பிரச்சாரம்!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், முதுகுதண்டுவட பாதிப்பு தினத்தை (செப்டம்பர்-05) முன்னிட்டு தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. 

இதில் செஞ்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டைராஜ் தலைமையில், விபத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பொதுமக்களிடம் வாகன பயணத்தின் போது சாலை விதிகளை முறையாக பின்பற்றுதல், கைபேசி தவிர்த்தல், தலைகவசம் அனிவது, சீட் பெல்ட் அனிதல் உள்ளிட்ட முறையான பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தி வாகனத்தில் பயணியுங்கள் என துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

நிகழ்வில் ரமேஷ் பாபு (கன்னிகா மொபைல்ஸ்), காவலர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை