Top News

அமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியரும், சமூக ஆர்வலர் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் வழங்கி கொண்டாட்டம்!

 

அமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியரும், சமூக ஆர்வலர் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் வழங்கி கொண்டாட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து திருவஞ்சேரி, மற்றும் மப்பேடு ஆகிய பகுதிகளில் ஏப். 24, வியாழனன்று அமுதம் ரிப்போர்ட்டர் நிறுவனர், ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலரான டாக்டர், வாஞ்சிநாதன் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர், மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாகன விபத்துகள் அதிகம் ஏற்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டது. 

மேலும் இந்நிகழ்ச்சியில் சமூக பணியில் ஈடுபட்டு வரும் சமூக அக்கறை கொண்ட ஆர்வலர்களின் சேவையை பாராட்டி கெளரவிக்கப்பட்டது. இந்த பிறந்தநாள் விழா பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி நீர் மோர், தர்பூசணி வெள்ளரி, மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அமுதம் ரிப்போர்ட்டர் இணை ஆசிரியர் செல்வாபிரியன், பத்திரிக்கையாளர் D. அல்லாபகேஷ், மெட்ரோ மேன் ஆசிரியர் S. அன்பு, துணை ஆசிரியர் வெங்கடேஷ் மற்றும் அமுதம் ரிப்போர்ட்டர் நிருபர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்,

Post a Comment

புதியது பழையவை