Top News

செஞ்சியில் இந்து முன்னணி, பாஜக சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்தநாளை விழா!

 

செஞ்சியில் இந்து முன்னணி, பாஜக சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாளையொட்டி செஞ்சி நான்கு முனை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு இந்து முன்னணி சிவசுப்பிரமணியன், பாஜக வி.பி.என். கோபிநாத், ஆர்.எஸ்.எஸ். நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் விஷ்ணு, ஏழுமலை, சரவணன், ராமு உள்ளிட்ட இந்து முன்னணி, பாஜக, மற்றும் ஆர். எஸ். எஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை