விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலத்தில் புதிதாக ரூ.86 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் மறு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி ஆகஸ்ட் 26, அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் ஏனாதிமங்கலத்தில் 86 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை மறு கட்டுமான பணிகள் முழுமை பெறும் தருவாயில் உள்ளதாகவும், எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டு மற்றும் அணையிலிருந்து செல்லும் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 90% முழுமை பெற்றுள்ளன மேலும், அணைக்கட்டு பணிகள் அனைத்தும் தரமாக செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு முறையும் படிப்படியாக அணையின் தரம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறினார். மேலும் அணைக்கட்டு சுற்றி பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதுகாப்பாக தடுப்பு சுவர்கள் அமைக்கப்படும் அணையின் கட்டுமான பணியினையும் பார்வையிட்டார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக