Top News

செஞ்சி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 36-ஆம் ஆண்டு பூ பல்லுக்கு பெருவிழா!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்தில், மலர்தொடு வியாபாரிகள் சார்பில், 36 ஆம் ஆண்டு ஆடிபூரத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 07, புதன்கிழமை) பூபல்லக்கு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதைமுன்னிட்டு காலையில் மூலவர் ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது தொடர்ந்து 10 மணிக்கு செஞ்சி அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் இருந்து அக்னி சட்டி ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து 108 பால்குடம் ஊர்வலமாக கொண்டு வந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, பல வண்ண வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை ஏற்றப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவினை தொடர்ந்து மாலை 6 மணியளவில் மாரியம்மன் ஆலயத்தில் மங்கையர்களால் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து இரவு 10.30 மணியளவில் விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், முருகப்பெருமானுக்கு பலவித மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூப்பல்லக்கு ரதத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மங்கல மேளம், கேரளா சன்டி மேளம் இசைக்க, வான வேடிக்கையுடன் பூப்பல்லக்கில் சுவாமி வீதி உலா புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை