விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ. 5. 59 கோடி மதிப்பீட்டில் புதிய சமூக நீதி மாணவியர் விடுதி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக செஞ்சி பேரூராட்சியில் ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமூக நீதி மாணவியர் விடுதியை திறந்து வைத்தார்.
இதையடுத்து சமூக நீதி மாணவியர் விடுதி கட்டிடத்தில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். மஸ்தான், விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் வளர்மதி, தாட்கோ செயற் பொறியாளர் அன்பு சாந்தி, செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், விடுதி காப்பாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக