செஞ்சி அரசு பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு புதிய மாணவர்கள், சால்வை அணிவித்து வரவேற்ற தலைமை ஆசிரியர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு இன்று எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
இதில் புதியதாக சேரவந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆயிஷாபேகம் சால்வை அணிவித்து வரவேற்றார் இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கையினை பதிவு செய்தார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக