விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் வேட்டவலம் லயன்ஸ் சங்கம் மற்றும் செஞ்சி அரசு மருத்துவமனை, சம்யுக்தா மருத்துவமனை சார்பில் 11 ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா தலைமை மருத்துவ அலுவலர் மரு. கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் கலந்துகொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவுரைகளை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக