விழுப்புரம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை தற்காப்பு கலையில் தங்கப்பதக்கம் வென்ற செஞ்சியை சேர்ந்த மாணவர்கள் அமைச்சர் மஸ்தான் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் எம்.ஜி.ஆர் உள் விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் (2022 - 2023) நடைபெற்று வந்தது,
இதில் 12/02/2023 அன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பிரிவில் தற்காப்பு கலையான சிலம்பம் - சுருள் வாள் போட்டியில் செஞ்சி ஸ்ரீ தரணி இன்டர்நேஷனல் பள்ளி(CBSE) மாணவன் A.ஹரிஸ்ரீ தமிழ்மாறன் பங்கேற்று சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து முதல்வன் கோப்பை தங்கப் பதக்கமும், சசிலம்பம் - மான் கொம்பு வீச்சு போட்டியில் வெள்ளி பதக்கமும்,
பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பிரிவில் சிலம்பம் - மான் கொம்பு வீச்சு போட்டியில் திண்டிவனம் கருவம்பாக்கம், தரம்சந்த் ஜெயின் பள்ளி (CBSE) மாணவன் B.கார்த்திகேயன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர். மேலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட விலையாட்டு அலுவலர் கையெழுத்து இட்ட முதலமைச்சர் கோப்பைக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான தற்காப்பு கலையில் வெற்றி பெற்ற இருவரும் தற்காப்பு கலை பயிற்றுவித்த ஆசான் எஸ்.குமாரசாமி மேல்நிலை உடற்கல்வி இயக்குனர் ஓய்வு, சிலம்பம் தமிழ்நாடு சங்கம் விழுப்புரம் மாவட்ட செயலாளர் மற்றும் சிலம்பம் பயிற்றுனர் அவர்களுடன் மாண்புமிகு தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் அவர்களை 11/07/2023 அன்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றனர். அப்போது அமைச்சர் மாணவர்களை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக