Top News

விழுப்புரம்: மேல்மலையனூர் ஒன்றியத்தில், 15.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கலைஞரின் கனவு இல்லம்! 43 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையினை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்!!

 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் (2024-25) மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேல்மலையனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னமங்கலம், ஈயகுணம், எதப்பட்டு, எய்யில், கொடம்பாடி, கோட்டப்பூண்டி, செவலபுரை, சொக்கனந்தல், தாழங்குணம், துறிஞ்சிப்பூண்டி, நாரணமங்கலம், நொச்சலூர், மேலருங்குணம், மேல்மலையனூர், வடவெட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் பயனாளிக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில்,


கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்(2024-25) கீழ் 43 பயனாளிகளுக்கு 15 கோடியே 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேல்மலையனூர் ஒன்றிய குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையதுமுகமது (கி.ஊ), சிவசண்முகம் (வ.ஊ), வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை