விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்தில் 63.19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 6 அரசு கட்டிடங்களை மக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியத்தில் அன்னமங்கலம் ஊராட்சியில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் (2023-24) கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய நாடக மேடை, தேவனூர் ஊராட்சியில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் (2023-24) கீழ் ரூ.13.16 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்(2022-23) கீழ் ரூ.5.86 லட்சம் மதிப்பில் இருப்பு அறையுடன் கூடிய சமையலறை கூடம்,
சித்தேரி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்(2022-23) கீழ் ரூ.5.61 லட்சம் மதிப்பில் இருப்பு அறையுடன் கூடிய சமையலறை கூடம்,
தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் (2021-22) கீழ் ரூ.23.56 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம், வடவெட்டி ஊராட்சியில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் (2023-24) கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய பகுதி நேர நியாய விலை கடை அக 63 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 6 அரசு கட்டிடங்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி நியாய விலைக் கடைகளில் நுகர்வோர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிலையில் மேல்மலையனூர் ஒன்றிய குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், வட்டார கல்விக்குழு தலைவர், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவனூர் சாந்தி சக்திவேல், சித்தேரி சிவராமன், வடவெட்டி ராஜமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையதுமுகமது (கி.ஊ), சிவசண்முகம் (வ.ஊ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக