Top News

வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மக்களுடன் முதல்வர் திட்டம்! கோரிக்கை மனுக்களை பெற்று அமைச்சர் தொடங்கி வைத்தார்!!

 

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தையூர், கீழ்பாப்பாம்பாடி, துடுப்பாக்கம், ஆனாங்கூர், கடம்பூர், களையூர், மேல்களவாய், பெரும்புகை, ஆனத்தூர், நெகனூர் உள்ளிட்ட கிராம பஞ்சாயத்து மக்களுக்கான "மக்களுடன் முதல்வர் திட்டம்" இன்று நடைபெற்றது. 

மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சியில் வல்லம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அம்மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீதான தீர்வினை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் செஞ்சி வருவாய் வட்டாச்சியர் ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை