விழுப்புரம் செஞ்சி சாலையில் அமைந்துள்ள இறைநேசர் குல்ஜார் சாகிப் தொண்டு அறக்கட்டளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர்.இரா.லட்சுமணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அறக்கட்டளை சார்பில் 100 ஏழை எளிய மக்களுக்கு சேலைகள் வழங்கினார்.
விழாவில் அறக்கட்டளை நிறுவனர் கு. குருபாஷா, து. தலைவர் ஹரிதாஸ், செயலாளர் ராஜேந்திரன், து. செயலாளர்கள் ஆதாம் அலி, ராஜசேகரன், பொருளாளர் சுந்தரபாலமுருகன், சட்ட ஆலோசகர் சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழவினை சிறப்பித்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

கருத்துரையிடுக