செஞ்சி அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்! எம்.எல்.ஏ மஸ்தான் கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்து!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137 வது பிறந்தநாளையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் ஆயிஷா பேகம் தலைமையில் குழந்தைகள் தின விழா இன்று (நவ.14) கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் அலி, மன்ற உறுப்பினர்கள் பொன்னம்பலம், சுமித்ரா சங்கர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

கருத்துரையிடுக