Top News

 

விழுப்புரம் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஹாக்கி போட்டி மயிலம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 

இப்போட்டியில் மேல்மலையனூர் தாலுக்கா நொச்சலூர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் 18 மாணவிகளும் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் மஸ்தான் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உடன் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொதக்தியார் அலி, திமுக தொண்டரணி பாஷா, தலைமையாசிரியர் கோபிநாத், ஆசிரியர்கள் தமிழரசன், சிவகாமி, ரோஸ்லின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை