Top News

 யுனெஸ்கோ நிறுவனத்தால் புராதான பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள செஞ்சி கோட்டையை சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வரும் செஞ்சி கோட்டையை கடந்த ஜூலை மாதம் உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரித்து அறிவிப்பு செய்தது. இதனைத் அடுத்து இந்திய சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் செஞ்சி கோட்டையை பார்வையிட்டு சென்று வருகின்றனர்.

இதனிடையே வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் இன்று சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, தாய்வான், மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் செஞ்சி கோட்டைக்கு வருகை தந்து கோட்டையின் பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை சார்ந்த அதிகாரிகள் செஞ்சி கோட்டையின் வரலாற்று சிறப்புகள், கல்யாண மகாலில் உள்ள புகைப்பட கண்காட்சி பற்றி விளக்கி எடுத்துரைத்தனர்.

Post a Comment

புதியது பழையவை