விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்களவாய் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமையில் செயற்குழு ஆலோசனை கூட்டம் நேற்று (நவ.13) வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் திமுக மண்டல தேர்தல் பொறுப்பாளரும், தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம் SIR மூலமாக நாம் இப்போதே தேர்தல் பணிக்கு அடிக்கல் நாட்டி உள்ளோம், வாக்காளர் பட்டியலில் உங்களுடைய வாக்குகளை சேர்த்ததே நாங்கள் தான் எனக்கூறி அவர்களிடம் உரிமையோடு வாக்கு கேட்கலாம், எனவே வாக்காளர் படிவத்தை உடனடியாக பூர்த்தி செய்து கொடுங்கள் எனவும்,
பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பாக பணியாற்றினால் தான் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கும், நம்முடைய கழகத்தை சேர்ந்த அனைவரும் ஒன்றாக பணியாற்றி துரிதமாக வாக்காளர் பட்டியல் பணிகளை மேற்கொள்ள வேண்டும், உச்ச நீதிமன்றம் SIR வழக்கை நவ 23-ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது, எதுவாக இருந்தாலும் நாம் நமது பணிகளை செய்து முடித்தாலே 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறலாம் என கழக நிர்வாகிகளுக்கு கூறினர்.
மேலும் அனைத்து நிலை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இந்நிகழ்வில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய நகர செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

கருத்துரையிடுக