செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.13.92 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் திறப்பு விழா!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி மக்களின் 40 ஆண்டுகள் கனவை நனவாக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சட்ட பேரவையில் செஞ்சி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த நிலையில்,
செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தில் ரூபாய் 13 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக செஞ்சி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்துவைத்தனர்.
அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் குத்துவிளக்கு ஏற்றிவைத்து கல்லூரி கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ - மாணவிகள், கல்லூரி விரிவுரையாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

கருத்துரையிடுக