சத்தியமங்கலம்ஞான ஒளி சமூக உதவி அறக்கட்டளை சார்பில், 200 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர நலத்திட்ட உதவிகள் காவல் ஆய்வாளர் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் ஞான ஒளி சமூக உதவி அறக்கட்டளை சார்பில், சத்தியமங்கலம் வள்ளலார் தர்மசாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நிறுவனர் ஞானமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு உணவு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் ஞான ஒளி சமூக உதவி அறக்கட்டளை மூலம் மாதந்தோறும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருவதாக ஆய்வாளர் சுரேஷ்பாபு கூறினார்.
மேலும் மாற்றுத்திறனாளி ஒருவர் பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தார் இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் செயலாளர் முத்து கார்த்திகேயன், ஞான ஒளி சமூக உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் A.C. ராஜா, அறக்கட்டளை (பணியாளர்) வெண்ணிலா, சிபிஐ மாவட்ட செயலாளர் ஆல்பர்ட் வேளாங்கண்ணி, நவீன் எல்பிஜி கேஸ் சர்வீஸ் பிரான்சிஸ், ஜான்டி குரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

கருத்துரையிடுக