Top News

செஞ்சியில் இரத்த🩸தான முகாம், அமைச்சர் மஸ்தான் துவக்கிவைப்பு!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இரத்த தான முகாமினை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்கள் துவக்கி வைத்து இரத்தம் தானம் செய்பவர்களை பாராட்டி நலம் விசாரித்தார். 

இதனை தொடர்ந்து இம்முகாமினை ஏற்படு செய்திருந்த குழுவினரால் அமைச்சர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் இரத்ததானம் உயிர்காக்கும் சிறந்த சேவை என அக்குழுவினை பாராட்டினார். அத்துடன் அப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியில் குடிநீர் வசதி செய்து தரும்படி அமைச்சர் அவர்களின் மனு அளித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட அவர் விரைவில் செய்து தாப்படும் என உறுதியளித்தார், இந்நிகழ்ச்சியினை நினைவுகூறும் வகையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு நீரூற்றினார். 

இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்பவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் உடல் பரிசோதனை செய்யப்பட்டு இரத்தம் தானம் செய்ய தகுதியுடைவர்களிடம் இரத்தம் தானம் பெறப்பட்டது பின்னர் அவர்களுக்கு சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்கப்பட்டு அத்துடன் மருத்துவர்களால் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. இந்த இரத்ததான முகாம் TN16 பசியில்லா மனிதர்கள், TN16 இரத்ததானம் குழு மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக் குழுவினரால் இணைந்து நடத்தப்பட்டது.

Post a Comment

புதியது பழையவை