விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உழவர் சந்தை வளாகத்தில் திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட், தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 75-வது சுதந்திர தின விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இவ்விழா வேளாண் உதவி இயக்குனர் Ln.சரவணன் உழவர் சந்தை நிர்வாகி திருமதி. சத்தியா முன்னிலையில் திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்க தலைவர் Ln.நூருல்லா அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். உடன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் Ln.ஸ்மைல்ஆனந்த், Ln.முத்துராஜ்குமார், Ln.ஆனந்தகுமார், Ln.கமலக்கண்ணன், Ln.ஆசைத்தம்பி, Ln.தேவா, Ln.சதாம்உசேன் மற்றும் விவசாயிகள், பொது மக்கள் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள் பின்பு அப்பகுதி மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
கருத்துரையிடுக