விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கோழிப்பண்னை கிராமத்தில்
குன்றின் மீது வேல் நடப்பட்டு முன்னோர்கள்
வழிப்பட்டு வந்தநிலையில் இன்றைய தலைமுறையினர் இக்கோயிலை புணரமைத்து வள்ளி தேவசேனா சமேத ஞான
வெற்றிவேல் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது கணபதி
ஹோமத்தை தொடர்ந்து கோ
பூஜை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம்.
வாஸ்து சாந்தி, யாகசாலையில் முதலாம்
கால பூஜை. கலசஸ்தாபனம். பீட
பூஜை யந்திர ஸ்தாபனம் என
பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது.
20-ந் தேதி ஆவணி 4ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், பால்குடம் எடுத்து வருதல் பின்னர் கடம் புறப்பாடு நடத்தப்பட்டு . வள்ளி தேவசேனா சமேத ஞான வெற்றிவேல்முருகனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அங்கு
கூடி இருந்த மக்களுக்கும் ஆன்மிக அன்பர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஸ்ரீமுருகன் வள்ளி
தேவசேனா திருக்கல்யாணம் நடைப்பெற்றது இந்த திருமண வைபோக கோலத்தில் ஆன்மிக அன்பர்களுக்கும்
பக்தர்களுக்கும் ஸ்ரீமுருகபெருமான் வள்ளி தேவசேனா உடன் அருளாசி வழங்கினார் இத்திருக்கோயில்
திருப்பணியையும் கும்பபிஷேக ஏற்பாடுகளையும்
கோழிப்பண்னை, செ.பூதூர், நகர்
கிராம பொதுமக்கள் ஏற்பாடு
செய்தனர்...
செய்தியாளர் மு.ஏழுமலை
கருத்துரையிடுக