Top News

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பா?.. மேலும் தளர்வுகளா?.. இன்று ஆலோசனை.....

 சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்தது... ஏராளமானோர் உயிரிழந்தனர்.. தொற்று பாதிப்புக்கு ஏராளமானோர் ஆளானார்கள்.. ஒரு நாளைக்கு 35 ஆயிரம் என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உயர்ந்தது.

இதையடுத்து, தமிழக அரசு பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தொற்று பாதிப்பானது 2,000-க்கும் கீழே குறைந்தது.. இருந்தாலும், சென்னை, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் தொற்று குறையாமல் இருந்தது.. இங்கும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை கையில் எடுத்ததையடுத்து, கொரோனா பரவல் குறைந்து வருகிறது.


3வது அலை

3வது அலை பரவல் இந்தியாவுக்கு வர உள்ளதால், எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறையும், வல்லுநர்களும் அலர்ட் செய்து வருகிறார்கள்.. கடந்த மாதமே 3வது அலை பரவல் பாதிப்பு கேரளாவுக்கு அதிகம் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருகின்றன.. 3வது அலை பரவலால் கோவைக்குதான் அதிக பாதிப்பும் உள்ளதாக கூறப்பட்டுள்ளன.. எனவே, தமிழகத்தில் லாக்டவுன் போடுவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதா என்ற சந்தேகமும் நீடித்து கொண்டிருக்கிறது.

வாய்ப்பு

தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது வரும் 23-ம் தேதி காலை காலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது... தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை... இவைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.


கட்டுப்பாடுகள்

இந்நிலையில், எனவே, ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடக்கவிருக்கிறது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ வல்லுநர்கள், பல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

விவரங்கள்

காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.. இந்தக் கூட்டத்தில் 9ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. 3வது அலை முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.. எனவே, மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா, அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்..!


Post a Comment

புதியது பழையவை