விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேலச்சேரி கிராமத்தில் ஆடிப்பெருக்கை தொடர்ந்து சம்பா சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு (டிரம் ஸீடர்) இயந்திரங்கள் மூலம் நெல் மணிகள் மக்கள் சில ஏக்கர் பரப்பளவில் மட்டுமே விதைக்கின்றனர். நடவு நெல் விளைச்சலைக் காட்டிலும் நேரடி நெல் விதைப்பில் அதிக மகசூல் கிடைக்கிறது என அம்முறையை பயன்படுத்தும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர் இந்த நேரடி நெல் விதைப்பு செஞ்சி மற்றும் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வு சற்று குறைவாகவே உள்ளது. விவசாய துறை சார்ந்த அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நேரடி நெல் விதைப்பு முறை பற்றி விழிப்புணர்வுகள் மேற்கொண்டால் விவசாயிகள் நல்ல பலன் பெறுவார்கள்.
செஞ்சி அருகே சம்பா சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு
Dr VANJINATHAN
0
கருத்துரையிடுக