நாடெங்கிலும் கொரோனா எனும் கொடிய நோய் தோற்று இரண்டாம் அலையில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தி வருகிறது மேலும் மருத்துவ நிபுணர்கள் தற்பொழுது செப்டெம்பர் மாதம் மூன்றாம் அலை வீசக் கூடும் என அறிவுறுத்தி உள்ளதைத் தொடர்ந்து அரசு மக்கள் அதிகம் கூடும் கோவில்கள் போன்ற இடங்களில் தடைவிதித்து வரும் நிலையில்
செஞ்சியில் வாரச்சந்தையில் கால்நடைகள் விற்பனைக்காக கூடும் மக்கள் அரசு அறிவுறுத்தலை காற்றில் பறக்கவிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக கால்நடை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் பலர் முக கவசம் இன்றியும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் வாரச்சந்தை நடைபெறுவது கொரோனா எனும் கொடிய நோய் மூன்றாம் அலை வீச ஊக்குவிப்பதாக உள்ளது. இதனால் கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இதற்கு வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்களின் கேள்வியாக உள்ளது?
கருத்துரையிடுக