நாடெங்கிலும் கொரோனா எனும் கொடிய வைரஸின் நோய் தொற்றின் பரவல் அதிகரிக்க தொடங்கியது இந்நோயின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களால் கடந்த 2020 மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மேலும் நோய் தொற்று பரவாமல் தடுக்க தனிமனித இடைவெளி, சானிடைசர் அல்லது சோப்பு கைகளை சுத்தமாக வைத்திருக்கொள்ளுதல் மற்றும் முக கவசம் அணிதல் போன்ற பல்வேறு வகையான முயற்ச்சிகள் மேற்கொண்டு வந்தது, இதனால் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. நோய்த்தொற்றின் தாக்கம் குறைவதற்கு ஏற்றாற்போல் தமிழக அரசு ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது இதனால், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருந்தது தற்போது பெருந்தொற்று பெரிதும் குறைந்த காரணத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இருவாரங்களாக சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நேற்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்தும் பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
கருத்துரையிடுக