Top News

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இலட்சதீப திருவிழா!

 

   விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரிய அகரம் காந்தி கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் 75 ம் ஆண்டு லட்சதீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாளன்று மாலை 6 மணி அளவில் இலட்ச தீபங்கள் ஏற்றி திருவிழா கோலாகலமாக நடைபெறும். விழாவானது சித்திரை முதல் நாள் தொடங்கி ஏழு நாட்கள் நடைபெறும்.

தமிழகத்தில் பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் விழாக்கள் நடைபெறாமலிருந்த நிலையில் தற்போது பெருந்தொற்று பெரிதும் குறைந்த காரணத்தினால் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில் தற்பொழுது

 இலட்சதீப திருவிழாவை முன்னிட்டு விநாயகருக்கு கலையில் கணபதி ஹோமம் செய்து பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணி அளவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இலட்சம் தீபங்கள் ஏற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விநாயகப்பெருமானை வழிபட்டனர். செஞ்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து செஞ்சி ராகப்பிரியா இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி நாதஸ்வர மேளதாளம், நையாண்டி மேளம் இசைக்க கரகாட்டம், ஒயிலாட்டம், வானவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

Post a Comment

புதியது பழையவை