செஞ்சி உழவர்சந்தையில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகள் மூலம் காய்கறிகள், நுகர்வோர்கள் வரத்து அதிகரித்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய மூன்று இடங்களில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இருப்பினும் செஞ்சி உழவர் சந்தைக்கு விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வருகை இல்லாத காரணத்தால் இன்று செஞ்சி உழவர் சந்தையில் தமிழக அரசின் விழுப்புரம் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேலாண்மை வணிகத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் உழவர் சந்தைகளில் காய்கறிகள் வரத்தினை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு கூட்டம் செஞ்சி உழவர் சந்தையில் விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கோ.கண்ணகி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விதைவிக்கும் காய்கறிகள், தானிய வகைகள், பழங்கள் போன்றவைகளை எந்தவிதமான இடைத்தரகர்களும் இல்லாமல் உழவர் சந்தயில் நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் இந்த உழவர்சந்தை திட்டம் இத்திட்டம் அட்சி மாற்றத்திற்குப் பிறகு ஆதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்தது.
இப்போது மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டானின் அவர்கள் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகள் மறுசீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது, இருப்பினும் ஓராண்டுகள் ஆகியும் செஞ்சி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே உள்ளது எனவே விவசாயிகளிடம் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்யுமாறு அறிவுறித்தினார். பின்னர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
விவசாயிகள் நுகர்வோர் வருகை குறந்த காரணத்தால் தங்கள் விளைபொருட்கள் விற்காமல் வீனாகிறது என கூறினர், மேலும் அரசு பேருந்துகள் உழவர்சந்தைக்கு இயக்கப்பட்டால் நுகர்வோர் வருகையை அதிகப்படுத்த முடியும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) காரல்மார்க்ஸ், திண்டிவனம் வேளாண்மை அலுவலர் கருப்பையா, செஞ்சி தோட்டக்கலை அலுவலர் பிரகாஷ், செஞ்சி தோட்டக்கலை உதவி இயக்குனர் சுகந்தி, செஞ்சி துணை வேளாண்மை அலுவலர் கர்ணன், செஞ்சி உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணன், செஞ்சி உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண வணிகம்) பூரணி, செஞ்சி உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜேஷ், செஞ்சி உதவி தோட்டக்கலை அலுவலர் சௌமியா, செஞ்சி உதவி தோட்டக்கலை அலுவலர் வெங்கட்ராமன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக