வாஸ்து என்றால், பொருட்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடங்கள் என்பது பொருள். வாஸ்துவுக்கான தெய்வத்தை வாஸ்து புருஷன் என்று வணங்குகிறோம்.
வாஸ்து முறைப்படி வஸ்துக்களை அமைத்தால் வாஸ்து புருஷனின் ஆசிகள் பெற்று வளமோடு வாழலாம். அந்த வகையில் உங்களின் புது வீட்டுக்கான அறைகள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான எளிய வாஸ்து டிப்ஸ்களைத் தருகிறார் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்.

பூஜையறை:
வீட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது பூஜையறை. உதயத்தின் போது, சூரியக் கதிர்கள் வீட்டில் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அந்த இடத்தைப் பூஜை அறையாக உபயோகிக்க வேண்டும். பொது வாக, சூரிய ஒளி வடகிழக்கில் விழுவது போன்ற மனையையே தேர்ந்தெடுப்பார்கள். எனவே, வீட்டில் வடகிழக்கு பாகத்தில் பூஜை அறை அமைப்பது விசேஷம்.
குளியல் அறை:
பொதுவாக வீட்டில் பயன்பட்ட நீர், வீட்டில் விழும் மழை நீர் ஆகியன வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசை வழியே வெளியேறும்படி தரை மட்டத்தை அமைப்பார்கள். அதற்கேற்ப வீட்டின் குளியலறையை கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பாகத்தில் அமைக்கலாம்.

படிக்கும் அறை:
வாஸ்து சாஸ்திர நூல்களில், வீட்டின் தென்மேற்குப் பகுதி படிப்பதற்கு உரியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஜோதிட விதிப்படி புதன் வித்யாகாரகன்; குரு ஞான காரகன். ஆக, படிக்கும் அறை புதனுக்கு உரிய வடக்கு மற்றும் குருவுக்குரிய வடகிழக்கிலும் அமையலாம்.
சமையல் அறை:
ஒவ்வொரு மனிதருக்கும் மிக அத்தியாவசியமானது உணவு. சமையலுக்கு அக்னியே பிரதானம். அக்னிக்கு உரிய திசை தென் கிழக்கு. எனவேதான், தென்கிழக்கு திசையில் அக்னி பயன்பாட்டை ஏற்படுத்தினார்கள். அவ்வகையில் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமையலறையை அமைப்பது சிறப்பு; இதனால் அன்னம் செழிக்கும்.
படுக்கை அறை:
மனிதர்கள் ஒவ்வொருவரும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப் பாகவும், தெளிவான சிந்தனைகளுடனும் செயல்பட நல்ல நிம்மதி யான தூக்கம் அவசியம். அது கைகூட தென்மேற்கில் படுக்கை அமைக்கலாம். மேலும், படுக்கையறையில் கிழக்கு, மேற்கு அல்லது தெற்கில் தலைபாகம் இருக்க படுப்பது சிறப்பாகும்.
from விகடன் https://ift.tt/jEBaCrc
via IFTTT
கருத்துரையிடுக