Top News

சட்ட விதிகளின் படி செயல் படும் இரவு நேர கடைகளை மூட வற்புறுத்தக் கூடாது.! தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு..!!

 

   தமிழகத்தில் இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்பாடும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும் சில இடங்களில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே இனி சட்ட விதிகளின்படி செயல்படும் வணிக நிறுவனங்கள்,கடைகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றின் வணிக செயல்பாடுகளில் அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் போலீசார் யாரும் குறுக்கிட கூடாது. அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

Post a Comment

புதியது பழையவை