Top News

கோவையில் மாநில வேளாண் கண்காட்சி! 21 வது பதிப்பாக அக்ரி இன்டெக்ஸ் 2023!!

கோவை மாவட்டத்தில் மாநில வேளாண் வணிக கண்காட்சி அக்ரி இன்டெக்ஸ் 2023 கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 14 முதல் 17 வரை நடைபெறுகிறது.

இந்தியாவின் முதன்மையான வேளாண் வணிக கண்காட்சிகளில் ஒன்றான அக்ரி இன்டெக்ஸ் 2023 மாநில வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் 21 வது பதிப்பாக ஜூலை 14 ம் தேதி துவங்கி 15,16,17 ஆகிய நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இங்கு விவசாய பொருட்கள் கண்காட்சி, விற்பனை மற்றும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

21 வது பதிப்பாக நடைபெரும் வேளாண் கண்காட்சி துல்லிய வேளாண்மை மற்றும் நுண் நீர் பாசனம் மூலம் இந்திய வேளாண்மையில் மாற்றங்களை உருவாக்கும் நோக்கத்தில் 6 அரங்குகளில் 480 நிறுவனங்கள் வேளாண் சார்ந்த பொருட்களை காட்சிப்படுத்தி இருக்கின்றன. கண்காட்சியில் கொரியா, இஸ்ரேல்,, ஜப்பான், ஸ்வீடன் , பிரான்ஸ், ஆகிய நாடுகளில் இருந்தும், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நவீன தொழில் நுட்பம் சார்ந்த வேளாண் சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.

மேலும், வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள், பாசனக் கருவிகள், கால்நடைப் பராமரிப்பு, வேலிகள், எடைக் கருவிகள், பம்புகள், உரம், விதை உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் சார்ந்த பொருட்கள் இடம்பெற உள்ளதாகவும், நாடு முழுவதிலும் இருந்து வேளாண் நிபுணர்கள், உணவுப் பதப்படுத்தும் தொழில்துறையினர், இடுபொருள், விதை உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், வங்கியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த மாபெரும் வேளாண் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:                              மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை