விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்களிக்க ஒரு விரல் உருவம் பொருந்திய செல்பி பாயிண்ட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். சி. பழனி ஒரு விரல் உயர்த்தி சுயபடம் எடுத்துக்கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்குமாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் தேர்தல் நடத்தும் அலுவலர் - மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் யுவராஜ், சிறப்பு வட்டாட்சியர் ஜெயலட் சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக