விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழக முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று விழுப்புரத்தில் ரோட் ஷோ மற்றும் நான்கு முனை சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன், வானூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ சக்கரபாணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக