செஞ்சியில் டிரான்ஸ்பார்மரில் திடீரென பற்றி எரிந்த தீயினால் பரபரப்பு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார் சங்கர் ஜுவல்லரி எதிரில் உள்ள டிரான்ஸ்பார்மரில் டிஸ்டிபிபூசன் டிரான்ஸ்பார்மர் மீட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது
இதனை கண்ட பொதுமக்கள் மின் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலரிந்த மின்வாரியத்தின் ஊழியர்களால் கணநேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கேஸ் மூலம் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் மின் ஊழியர்கள் விபத்து ஏற்பட்ட டிரான்ஸ்பார்மரின் மின் இணைப்பை துண்டித்து மாற்று மின் இணைப்பு வழங்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துரையிடுக