Top News

சத்தியமங்கலம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா! கொடியேற்றத்துடன் தொடக்கம்!!

 


சத்தியமங்கலம் அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஜூன் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் நூற்றாண்டை கடந்த மிகவும் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 5-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று புதன்கிழமை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 

இதையொட்டி, ஆலயத்தில் காலை, மாலையில் திருப்பலி நிறைவேற்றினர். மாலை 5 மணிக்கு மேல் திருக்கொடி ஊரைச் சுற்றி பவனியாக கொண்டுவரப்பட்டு தொடர்ந்து ஆராதனைகள் நடந்தது திருத்தல பங்கு தந்தை எ. சிறில் தலைமையில் சிறப்பு விருந்தினராக A. அருளானந்தம் விழுப்புரம் வட்டார முதன்மை குரு மறை மாவட்ட தலைமையேற்று 100 அடி உயரம் உள்ள கொடிமரத்தில் புனித அந்தோனியார் பெருவிழா கொடியை ஏற்றினார். 

இதில் மறை மாவட்ட அருள் தந்தையர்கள், அருள் சகோதரிகள், காரியக்காரர்கள், பங்கு இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை