Top News

திண்டிவனம், தாய் தமிழ் பள்ளியில், எம்.பி திருமாவளவன் பிறந்தநாள் விழா!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசணை தாய் தமிழ் பள்ளியில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யின் 62-வது பிறந்த நாளை முன்னிட்டு விஸ்வதாஸ் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட மைய செயலாளர் வழக்கறிஞர் திலீபன், கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அறுசுவை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் விசிக நிர்வாகிகள் புரட்சிக் கண்ணன், மணிபால், அபி, வசந்த், மணி, சுதர்சனன், ஜெயகாந்த், சத்ரு மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை