விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா செஞ்சி நான்கு முனை சந்திப்பு, அத்தியந்தல், செஞ்சி நிலா கல்வி நிறுவனம் ஆகிய இடங்களில் விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சனாதனத்தை ஒழிப்போம்! சமூக ஒற்றுமை காப்போம்! என்ற முழக்கத்துடன் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக விழா கொன்டாடப்பட்டது.விழாவில் திவிக மாவட்ட செயலாளர் பெரியார சாக்ரடீஸ், மதிமுக துனை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி, துரை திருநாவுக்கரசு, சுடரொளிசுந்தரம், கோபண்ணா, பாலச்சந்தர், பால்ஏழுமலை, நந்தகுமார், அரசு, திருநாவுக்கரசு, தேனன், பரிமளா, கோப்பெருந்தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று விழுப்புரத்தில் நடைபெற்ற பெரியார் 146வது பிறந்த நாள் விழாவானது, புதுவை சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து, பறை இசையுடன் முழக்கமிட்டு, பகுத்தறிவுப் பாடகர் காத்தவராயன் பாடல்களைப் பாடியவாறு சென்று திரு.வி.க நகரில் உள்ள பெரியார் சிலைக்கு விழுப்புரம் திமுக நகர பொருப்பாளர் சக்கரை தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வில் திமுக, தி.க, திவிக, பாம்செப் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக