விழுப்புரம் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டையில், செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பில் செஞ்சி - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் இருந்து ராஜகிரி கோட்டையின் நுழைவு வாயில் வரையில் தார்சாலை அமைப்பதற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, சென்னை தொல்லியல் துறை உதவி செயற்பொறியாளர் ஈஸ்வர், வட்டாட்சியர் ஏழுமலை, பேரூராட்சி மன்ற செயல் அலுவலர், செஞ்சிக்கோட்டை கண்காணிப்பாளர் இஸ்மாயில், பேரூராட்சி உதவி பொறியாளர் சுப்பரமணியன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக