Top News

விழுப்புரத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்! ஆட்சியர் அறிவிப்பு!!

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்ட பிரிவில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ/மாணவிகளுக்கு 11.09.2024 முதல் 16.09.2024 வரையிலும், கல்லூரி மாணவ/மாணவிகளுக்கு 13.09.2024 முதல் 21.09.2024 வரையிலும், பொதுப்பிரிவினர் வீரர்/வீராங்கனைகள் 14.09.2024 முதல் 23.09.2024 வரையிலும் அரசு ஊழியர்களுக்கு 20.09.2024 அன்றும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 24.09.2024 அன்று நடைபெற உள்ளது.

மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவு செய்த வீரர் /வீராங்கனைகள் மேற்கண்ட தேதிகளில் காலை 7.00 மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் ஆஜராகிட வேண்டும் எனவும் போட்டிகளில் பங்குபெறும் நபர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவியர்கள் Bonafied Certificate, பொதுப்பிரிவினர் இருப்பிட சான்றிதழ், அரசு ஊழியர்கள் அடையாள அட்டை நகல், மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அட்டை நகல் மற்றும் அனைத்து பிரிவினரும் ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்த அனைத்து வீரர், வீராங்கனைகளும் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதியில் போட்டிகளில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை