Top News

செஞ்சி வர்த்தக சங்கம் சார்பில், வெள்ளையன் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி!!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் மறைவையொட்டி செஞ்சி தாலுகா வர்த்தகர் சங்கம் மற்றும் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து காந்தி பஜார் வழியாக செஞ்சி நான்கு முனை சந்திப்பு வரை அமைதி ஊர்வலம் வந்து அங்கு அமைக்கபட்டிருந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை