செஞ்சியில், திமுக செயல் வீரர்கள் கூட்டம்! அமைச்சர் மஸ்தான் சிறப்புரை!!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்ட்பட்ட செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில், செயல் வீரர்கள் கூட்டம் இன்று திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உரையில் அவர் தொகுதியின் தேவைகள் குறித்து, அனைத்து ஊர்களிலும் என்னென்ன தேவைகள் உள்ளன என்றும், குறிப்பாக அனைத்து ஊர்களிலும் இடுகாடு அதன் பாதை சரியாக உள்ளனவா என்று கழக நிர்வாகிகள் பாருங்கள் தகவல் தெறிவியுங்கள், தொகுதியின் அமைச்சராக இவைகள் அனைத்தையும் சரி செய்வது எனது கடமை என கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் சேகர், மாநில விவசாய அணி இணை செயலாளர் செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினரும் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை