விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம், செவலபுரை கிராமத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த அகத்தீஸ்வரர் ஆலயத்தில் 120 ஆண்டுகளுக்கு பிறகு ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆவணி மாதம் 27 ஆம் நாள் வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், கும்ப கலச பிரதிஷ்டை, விமான கலசங்கள் பிரதிஷ்டை செய்து விசேஷ சாந்தி, வேத ஆகம திருமுறை பாராயணம், யாத்ரா தானம் உட்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா ஆவணி மாதம் 30 ஆம் நாள் (செப்டம்பர் 15) ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 7 மணியளவில் யாக சாலையில் யாக பூஜைகளும், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களுடன் மங்கள மேள வாத்தியம் இசைக்க கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் கலசங்கள் ஆலயத்தை சுற்றி கோபுர விமானத்திற்கு கொண்டுவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனையும், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சண்முகர், ஸ்ரீ பிரஹன்நாயகி, அகத்தீஸ்வரர் உள்ளிட்ட மூலவ மூர்த்திகளுக்கும், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீ ஊற்றப்பட்டு மகாதீப ஆராதனையும்,
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இனிதே வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் செவலபுரை, தாதங்குப்பம், தாதிகுளம், சித்தாத்தூர், சிறுவாடி, இராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு கருதி காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை செவலபுரை, தாதங்குப்பம், தாதிகுளம், சித்தாத்தூர், சிறுவாடி, இராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். மேலும் சிவாநாதன், பாலாஜி, ரமேஷ்குமார், ராகவவர்ஷன் உள்ளிட்ட ஆலய பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் அர்ச்சக குருக்கள்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக