Top News

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், விநாயகர் சதுர்த்தி விழா! இல்லங்களில் வைத்து வணங்கும் விநாயகர் சிலைகள்!!

 

உலகெங்கும் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து படையலிட்டு பூஜை செய்து வணங்குவர். இதனை முன்னிட்டு 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், செஞ்சி காந்தி பஜார் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அருகே, மண்பாண்ட தொழிலாளிகள் களிமண் கொண்டு செய்யப்படும் ஏராளமான விநாயகர் சிலைகள், குடைகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள காட்சி!

விநாயகர் சிலைகள் 30 ரூபாய் முதல் 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் என அளவிற்கு ஏற்றார் போல் 1000 ரூபாய் வரையிலும், குடைகள் 10 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை