விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கவரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது
இதில் 2024-25 ஆம் கல்வி ஆண்டின் 11ஆம் வகுப்பு பயிலும் 22 மாணவர்கள் மற்றும் 25 மாணவிகள் என மொத்தம் 47 மாணவ, மாணவியர்களுக்கு 1 லட்சத்து 7 ஆயிரத்து 8 நூரு ரூபாய் மதிப்பீட்டில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தமிழரசன், செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், வட்டாட்சியர் ஏழுமலை, பள்ளி தலைமை ஆசிரியர் அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக